[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வேலூர் மக்களவைக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல்

election-on-vellore-constituency-to-be-held-on-august-5th

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில்  பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. அந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய ம் இன்று அறிவித்துள்ளது. வரும் 11 ஆ ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். 22 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறும் நாள். வாக்குப் பதிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முடிந்து 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த  அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close