[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஜினாமா ஏன் ? - ராகுல் காந்தி விளக்கம்

why-resign-the-congress-leader-posting-rahul-gandhi-statement

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இந்நிலையின் தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது என்றும், காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு மேலும் பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது எனவும், எதிர்கால காங்கிரஸ் வளர்ச்சிக்கு தனது ராஜினாம முக்கிய பங்காற்றும் எனக்கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த மே 25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அப்போது முதல் ராகுல் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் மூத்தத் தலைவர்களும், தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ராகுல் தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close