[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், புதைக்கும் முன் பிழைத்த அதிசயம்!

man-allegedly-declared-dead-by-hospital-wakes-up-just-before-burial

உயிரிழந்ததாக, தனியார் மருத்துவமனையால் அறிவிக்கப்பட்ட வாலிபர், புதைப்பதற்கு முன் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்தவர் முகமது பர்கான் (20). ஜூன் 21 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த இவரை, தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நேற்று அறிவித்தது. இதையடுத்து சோகமான குடும்பத்தினர், கண்ணீர் விட்டனர். பின்னர் அவரை அடக்கம் செய்வதற்காகக் கொண்டு சென்றனர். 

அடக்கம் செய்யும் இடத்துக்கு அருகே அவர் உடலை வைத்திருந்தனர். அப்போது அவர் காலில் அசைவு ஏற்பட்டது. இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கள், அவர் உடலில் உயிர் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் வென்டிலேட்டரில் அவரை வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி பர்கானின் சகோதரர் கூறும்போது, ‘’தனியார் மருத்துவமனையில், ரூ.7 லட்சம் செலவழித்தோம். இன்னும், பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினோம். இந்நிலையில் நேற்று இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அடக்கம் செய்ய கொண்டு சென்றோம். அப்போது அவருக்கு உயிர் இருந்ததை அறிந்தோம்’’ என்றார்.

ராம் மனோகர் லோகியா மருத்துவர்கள் கூறும்போது, ‘’ பர்கான், ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார். ஆனால், அவர் மூளை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடி துடிப்பு, ரத்தம் அழுத்தம் சரியாகவே இருக்கிறது. வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்ற னர். 

இந்தச் சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close