[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் பொதுவிநியோக திட்டம் பாதிக்கும்” - சட்டப்பேரவையில் திமுக 

velu-speech-against-assembly-about-one-ration-card-one-nation

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் பொதுவிநியோக திட்டம் கடுமையாக பாதிக்கும் என்று திமுக சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஏ.வா.வேலு, “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. எல்லா மாநிலத்திலும் பொது விநியோக திட்டம் இருந்தாலும் வழங்கும் பொருட்களிலும், அளவுகளிலும் வித்தியாசம் உள்ளது.  தமிழத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களை முழுமையாக வழங்க முடியாத நிலையில் இத்திட்டம் செயல்படுத்தினால், தமிழகத்திற்கு நிதி சுமை அதிகம் ஏற்படும்” என்றார். 

மேலும், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என மத்திய அரசு தெரிவிப்பது, வடமாநில இந்தி மொழி பேசும் மக்களை தமிழகத்தில் குடியேற வைத்து, நமது சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும். மேலும்  தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, தேர்தல் கல்வி என அனைத்தும் மாநில சுயாட்சிக்கு எதிரானதாகவும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்ககூடியதாவும் உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தை புதைத்து, மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் செயல்கள்” எனக் குற்றம் சாட்டினார். 


இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்று உறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close