[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமித் ஷா

will-respond-to-those-talking-of-breaking-india-in-their-language-shah

இந்தியாவை பிளக்க நினைப்பவர்களுக்கு அவர்களுடைய முறையிலேயே பதிலளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றும் அதை யாராலும் பிரிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார். பயங்கராவாதத்தை ஒரு துளியும் பொறுத்துக்கொள்வதில்லை என்பதே மோடி அரசின் கொள்கை என்றும் காஷ்மீர் வளர்ச்சிக்கு உறுதிபூண்டிருப்பதாகவும் கூறினார். 

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் தொடங்கியதாகவும், கழிவறைகள் கட்டப்பட்டதாகவும், மின்சாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து குறிப்பிட்ட அமித் ஷா, நாட்டைத் துண்டாடுவது குறித்து பேசுபவர்களுக்கு அந்த முறையிலேயே பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்தார். 

காஷ்மீரில் ஜனநாயகம் மூன்று குடும்பங்களுக்கு சுருங்கிவிடக்கூடாது என தெரிவித்த அமித் ஷா, காங்கிரஸ் கட்சி அரசமைப்பு சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி பல மாநில அரசுகளை கலைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். ஜவர்ஹர்லால் நேரு குறித்து மக்களை தவறாக வழிநடத்த அரசு விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அமித் ஷா அதே நேரத்தில் வரலாற்று பிழைகளிலிருந்து பாடம் கற்பது அவசியம் என கூறினார். 

காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஜவர்ஹர்லால் நேரு போர் நிறுத்தத்தை அறிவித்ததே காஷ்மீரில் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என குற்றம்சாட்டினார். அமித்ஷாவின் பதிலை தொடர்ந்து காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close