[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஒரே வருடத்தில் 36 ஆயிரம் கோடி - ஜிஎஸ்டி அள்ளி வழங்கிய தெலங்கானா

telangana-nets-rs-36-000-crore-revenue-through-gst-4-of-india-s-revenue

தெலங்கானா மாநிலம் ஒரே ஆண்டில் ரூ.36,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியை இலக்கு நிர்ணயித்து வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் எந்த மாநிலம் எவ்வளவு ஜிஎஸ்டி வரி வசூல் செய்கிறது எனவும் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டின் ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ.36,312 கோடியை வசூல் செய்து தெலங்கானா மாநிலம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தத் தொகை இந்தியாவில் வசூல் ஆகும் மொத்த ஜிஎஸ்டி வரியில் 4% ஆகும்.

தெலங்கானாவில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது ஹைதராபாத். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகரிப்பினால் வேகமாக வளர்ந்து அந்நகரம், தங்கள் மாத வரி விகிதத்தில் 28% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஹைதராபாத் தான் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்திய அளவில் முறையாக வரி செலுத்துவபர்கள் 3% பேர் தெலங்கானாவில்தான் உள்ளனர். தெலங்கானாவில் நடப்பு ஆண்டின் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.18,565 கோடி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ரூ.19,420 கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

தெலங்கானாவில் ஜிஎஸ்டி ஆணையர் ஸ்ரீநிவாஸின் அதிரடி நடவடிக்கைகள் இந்த வரி வருவாய் உயர்விற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை அங்கு முறையாக செலுத்தப்படாத ரூ.272 கோடி வரி மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் போலியாக வரி தாக்கல் செய்த 36 கம்பெனிகளிடம் இருந்து ரூ.277 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹைதராபாத்தில் இருந்து மட்டும் ரூ.34 கோடி மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை வரி ஏய்ப்பு செய்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close