[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கட்சி பதவியை விட்டு விலகியதால் கண்ணீர்விட்டு அழுத சத்தீஸ்கர் முதல்வர்  

chhattisgarh-chief-minister-tears-up-after-state-congress-gets-new-boss

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகுவதை எண்ணி அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2013 ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக பூபேஷ் பாஹல் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 6 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளாக பாஜகவின் ராமன் சிங் முதலமைச்சராக இருந்த நிலையில் அவரை அகற்றிவிட்டு காங்கிரஸ் தலைவராக இருந்த பூபேஷ் பாஹல் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த மக்களைவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பூபேஷ் பாஹலும் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு ராகுல்காந்தியிடம் கடிதம் கொடுத்தார். 

இதையடுத்து மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவர் மோகன் மர்க்கத்தை கட்சி தலைமை நியமித்தது. இதைத் தொடர்ந்து ராய்பூரில் பூபேஷ் பாஹலுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. 

அப்போது முதல்வர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டேன். அப்போது தேர்தலில் தோல்வி அடைந்தோம். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடுமையாக உழைத்தோம். ஆனால், ஆட்சிக்கு வர முடியவில்லை.

2014 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் கட்சியின் வாய்ப்புக்கள் குறித்து நாங்கள் கவலைப்பட்டோம். ஜூன் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இருந்து ஆட்சியை பிடிக்கும்வரை கட்சியின் மூத்த தலைவர்களுடன் சண்டையிட்டோம். ஆனால், நம்முடைய தொண்டர்கள், தலைவர்களின் தொடர் முயற்சியால் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. 6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விட்டு இப்போது செல்வது வருத்தமாக இருக்கிறது. ” எனக் கூறிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். 

இதைப்பார்த்த தொண்டர்கள் பாஹல் நீடுழி வாழ்க, காங்கிரஸ் கட்சி நீடுழி வாழ்க போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close