[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

மாணவரை காட்டுமிராண்டித்த‌னமாக‌ தாக்கும் சக‌ மா‌ணவர்கள்: வீடியோ!

fight-between-two-student-gangs-in-andhra

ஆந்திராவில் கல்லூரி மா‌ணவர் ஒரு‌வரை ‌சக மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது‌. 

ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்வேறு காரணங்களால் அவ்வப்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வணிகவியல் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் வணிகவியல் பிரிவில் படிக்கக்கூடிய சிவய்யா என்னும் மாணவரை அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.

கல், பெல்ட், இரும்பு ராடு என கையில் கிடைத்த பொருட்களால் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மயக்கமடைந்த சிவய்யாவை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய மாணவர்களின் மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

வீடியோ:

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close