[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ஆம்புலன்ஸ் சேவை மறுப்பு: இருசக்கர வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணி

no-ambulance-bleeding-pregnant-woman-taken-to-hospital-on-a-bike-in-jharkhand

ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் வலியால் துடித்த கர்ப்பிணியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது நிறைமாத கர்ப்பிணியான சாந்திதேவி பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாந்திதேவி வலியால் மயக்க நிலைக்கே சென்றுவிட்டார். 

செய்வதறியாது திகைத்த சாந்திதேவியின் குடும்பத்தினர், அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி 10கிமீ பயணம் செய்து CHC என்ற மருத்துவமனையை அடைந்துள்ளனர். ஆனால் CHC மருத்துவமனை நிர்வாகம் அவரை 27கிமீக்கு அப்பால் உள்ள RIMS மருத்துமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த முறை ஆம்புலன்ஸ் வசதியை  CHC மருத்துவமனை வழங்கியுள்ளது. பெரும் போராட்டத்துக்கு பின் சாந்திதேவி RIMS மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாந்திதேவியின் கணவர், ''நாங்கள் ஆம்புலன்ஸ் சேவைக்காக முயற்சி செய்தோம். ஆனால் மறுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் முயற்சியும் வீணானது. வேறு வழி இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்'' என்று தெரிவித்தார்.

சாந்திதேவி வசித்து வரும் ஜடாக் கிராமத்தை அந்த தொகுதி எம்பி மாதிரி கிராமமாக தத்தெடுத்துள்ளார் என்றும், ஆனால் ஆம்புலன்ஸ் வசதி கூட இங்கு கிடைக்கவில்லை என்றும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close