[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை

haryana-congress-leader-vikas-chaudhary-shot-dead-near-delhi

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி, இன்று சுட்டுக்கொல்லப் பட்டார்.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் விகாஸ் சவுத்ரி. இவர் அம்மாநிலத்தின் பரிதாபாத்தில் உள்ள செக்டார் 9-ல் வசித்து வந்தார். வழக்கமாக ஜிம்முக்கு செல்லும் அவர் இன்று காலையும் சென்றார். உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், தனது காரில் ஏறினார்.

இதையும்  படிக்கலாம் : குழந்தை கொல்லப்பட்ட வழக்கு: கேரள இளைஞருக்கு அமெரிக்காவில் ஆயுள்!   

அப்போது அவர் காரை தாண்டி சென்ற மற்றொரு காரில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு இறங்கினர். இவரது காரை நோக்கி வந்த அவர்கள், விகாஷை நோக்கி சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பினர். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த விகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close