[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

மணமகளின் ஆதாரில் சாதி பெயர் இல்லை - திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

man-calls-off-marriage-over-missing-caste-name

மணமகளின் ஆதார் கார்டில் சாதி பெயர் இல்லை என்பதால் நடக்க இருந்த திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்திய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது  

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகாகனியில் உள்ள கோவில் ஒன்றில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளன. திருமணம் நேரத்துக்கு முன்னதாக திருமண தகவல்களை பதிவு செய்வதற்காக மணமக்களின் ஆதார் கார்டுகளை கோவில் புரோகிதர் கேட்டுள்ளார்.

மணமகள் கொடுத்த ஆதார் கார்டில் மணமகளின் தந்தை பெயருக்குபின்னால் அவரது சாதி பெயர் இடம் பெறவில்லை. இதனை மணமகனின் வீட்டாரிடம் புரோகிதர்தெரிவித்துள்ளார். சாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார் ஆதார் கார்டு விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். 

ஆனால் சாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்கும் வழக்கம் இல்லை என மணமகள் வீட்டார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகளின் சொந்த ஊரிலும் விசாரித்துள்ளார். ஊர் மக்களும் அதே விளக்கத்தை அளித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மணமகன் வீட்டார் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து காவல்நிலையம் சென்ற மணமகள் குடும்பத்தினர்,  எந்தக்காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்திவிட்டதாக மணமகன் வீட்டார் மீது புகார் அளித்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close