[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை 

income-tax-department-issued-rs-64-700-crore-refund-between-april-1-and-june-18-nirmala-sitharaman

வருமான வரித்துறை இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் 18ஆம் தேதி வரை 64ஆயிரத்து 700 கோடி ரூபாய் திருப்பி அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமான வரி தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அதில், “கடந்த ஆண்டிற்கான வருமான வரி தாக்கலில் ரூ6.49 கோடி மின்னனு முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 18.65 சதவிகிதம் அதிகமாகும். 
அத்துடன் வருமான வரியில் திரும்பச் செலுத்தவேண்டிய பணத்திற்கு அரசு முன்னுரிமை வழங்கிவருகிறது. 

இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 18 வரை ரூ 64,700 கோடி திரும்பி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு மட்டும் 1.61 லட்சம் கோடி ரூபாய் பணம் திரும்பி செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close