[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

cauvery-management-board-meeting-tomorrow

காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின்போது, பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகா இதுவரை பின்பற்றவில்லை.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே உத்தரவிட்டப்படி தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.

மேலும் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அணை கட்டுவதற்கு எடுத்து வரும் முயற்சிகள்‌ குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close