[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

வளர்ச்சியை எப்படி அதிகரிக்கலாம்..? பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

pm-modi-has-consultation-with-economists

நாட்டின் வளர்ச்சி குறித்து முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் நாட்டின் வளர்ச்சி குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 40 பொருளாதார நிபுணர்களும் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். அதில் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for PM Modi has consultation with economists

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். மேலும் வேலைவாய்ப்பின்மை அளவும் 45 ஆண்டில் இல்லாத அளவு அதிகரித்திருப்பதும் அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இதனால் இக்கூட்டத்தில் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close