மேற்கு வங்க மாநிலம் பாத்பரா எனும் பகுதியில் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பதட்டமாக சூழல் உருவாகியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாத்ரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சிறிது நேரத்தில் பெரும் கலவரமானது. இந்தக் கலவரத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். ஆனால் இன்னும் அங்கு பதட்டமான சூழலே நிலவுவதால், அப்பகுதி முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரம் நடைபெற்ற பகுதிகளை பார்வையில் அம்மாநில பாஜக தலைவர்கள் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று இன்று பார்வையிட்டது. மத்திய முன்னாள் அமைச்சர் அலுவாலியா, பாஜக எம்.எல்.ஏக்கள் சத்யபால் சிங், பிடி ராம் ஆகியோர் அங்கு சென்றனர். பாஜக குழுவினர் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அந்த இடத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் நாட்டு கையெறி குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
கலவரத்திற்கு காரணம் நீங்கள் தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். வன்முறை நடைபெற்ற பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு