[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது !

13-year-old-punjab-boy-charged-with-4-year-old-s-rape

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பக்கத்து வீட்டில் வசித்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான். எட்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய சிறுமியின் தாயார், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றதாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார், சிறுவனின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து அந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை ஹரியாணாவில் உள்ள டப்வாலி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி பகிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close