[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

மேற்கு வங்கத்தில் கலவரம் : இரண்டு பேர் பலி, பலர் காயம்

west-bengal-bhatpara-on-edge-as-fresh-clashes-leave-two-dead-three-injured

இருதரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியாகிதால் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாத்பரா எனும் பகுதியில் இன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சிறிது நேரத்தில் பெரும் கலவரமானது. இந்தக் கலவரத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். 

ஆனால் இன்னும் அங்கு பதட்டமான சூழலே நிலவுவதால், அப்பகுதி முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலவரம் நடந்த பகுதியை கேரள டிஜிபி வீரேந்திர குமார் நேரில் சென்று பார்வையிட்டார். மோதல் காரணமாக அப்பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்க போலீஸ் உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் காவல்துறையினர் சுட்டதால்தான் இரண்டு பேர் இறந்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால் இதனை காவல்துறையினர் மறுத்துள்ளனர். அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, இந்தக் கலவரத்தை தூண்டியது பாஜக எம்பி அர்ஜுன் சிங்தான் எனக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close