[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

“மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டு” - திமுகவிடம் காங்., கோரிக்கை?

congress-eyes-dmk-help-to-get-manmohan-singh-to-rajya-sabha

தமிழகத்தில் திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் ஒரு இடத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கும்படி காங்கிரஸ் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் கடந்த 14ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேவகவுடாவும் தேர்தலில் தோல்வியுற்றதால் இந்த முறை முன்னாள் பிரதமர்களே இல்லாத நாடாளுமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக கட்சிகள் தலா தங்கள் கூட்டணி கட்சிகள் உட்பட 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளன. 

மீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக்க தீவி‌ரம் காட்டி வரும் காங்கிரஸ், திமுகவிடம் இது தொடர்பாக பேசி இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக ஒரு இடத்தை மதிமுகவுக்கு வழங்க உள்ளது. காங்கிரஸுக்கும் ஒரு எம்பி பதவியை வழங்கினால் திமுக வசம் ஒரு எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். எனினும், மன்மோகன் சிங்கிற்காக கேட்பதால் காங்கிரஸின் வேண்டுகோளை திமுக பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close