[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு 

iaf-an-32-recovery-operation-six-bodies-and-seven-mortal-remains-have-been-recovered-from-the-crash-site

காணாமல் போன ஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 3ஆம் தேதி ஏஎன்-32 ரக இந்திய விமானம் காணாமல் போனதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் விமானம் ஜோர்கட் என்ற இடத்திலிருந்து மதியம் 12.27 மணிக்கு அருணாசலத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டதாகவும், அதன்பின் அந்தக் கட்டுப்பாட்டு அறைக்கும், விமானத்துக்குமான தகவல் தொடர்பு அன்று மதியம் 01.00 மணிக்கு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. அந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சி-130ஜே, ஏஎன்-32 மற்றும் எம்.ஐ-17 உள்ளிட்ட 3 இந்திய விமானங்களும், ஒரு ஏஎல்எச் ஹெலிகாப்டரும் புறப்பட்டது. இவை அனைத்தும் துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களை கொண்டுள்ளவை. வான்வெளியில் மட்டுமல்லாது தரை வழியாகவும், கடல் வழியாகவும் இரவு பகலாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

கூடுதலாக பி-81 ரக விமானமும் தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒருவார கால கடும் தேடுதல் பணிக்கு பிறகு 12 ஆம் தேதி காணாமல் போன விமானம் அருணாசலப்பிரதேசத்தின் லிப்போ மலைப்பகுதிகளில் விபத்துக்குள்ளானதாக கண்டறிப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு படையினரால் செல்ல முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பின்னர் 13 ஆம் தேதி அந்த இடத்தை அடைந்தனர் மீட்புப்படையினர். ஆனால் ஒருவரும் உயிருடன் இல்லை என்ற தகவல் மட்டுமே வந்தது. அதில் பயணம் செய்த 13 விமானப்படை வீரர்களின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இந்திய விமானப்படை. இன்று விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 6 இறந்து போன வீரர்களின் உடல்களும், 7 சிதைந்து போன வீரர்களின் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close