[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா..?

om-birla-bjp-mp-from-rajasthan-to-be-new-lok-sabha-speaker

ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் பதவியேற்றார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது எந்த சிக்கலும் இருக்காது என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். இன்று மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் முடிந்த பிறகு, ஓம் பிர்லா மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close