[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம்”- பிரதமர் மோடி

we-will-listen-opposition-side-says-pm-modi

எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “  நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், இந்த மக்களவைத் தேர்தலின்போது தான் அதிக பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதேபோல அதிக பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் ஒரு அரசு இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக பெரும்பான்மை பெற்றுள்ளது.

நாட்டை ஆள்வதற்கு பொதுமக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மக்களுக்கான முடிவுகளுக்கு ஆதரவு அளிக்கும்படி நான் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் செயல்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் கூட்டத்தொடரில் ஆக்டிவாக பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை எணக்கு இருக்கிறது. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆராக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியமானது. அவர்களின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம். எதிர்க்கட்சிகள் எந்தந்த முக்கிய விவாதங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அதன்படியே அரசு அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவிமடுத்து செயல்படும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close