[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ தொடர்ந்த மனு இன்று விசாரணை
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம் 

swiss-authorities-are-in-process-of-sharing-details-of-50-indian-swiss-account-holders

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியா அரசுடன் பகிர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் , சுவிஸ் வங்கிகளில் இருந்து தகவலை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக இரு நாடுகளும் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அதன் அடிப்படையில் சில முக்கிய தகவல்கள், பணம் வைத்திருப்போர் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியாவோடு பகிர்ந்திருந்தது. இதன் அடுத்தக்கட்டமாக மேலும் சிலரின் விவரங்களை இந்தியாவோடு பகிர சுவிஸ் அரசு முன்வந்துள்ளது. 

Image result for swiss bank

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 50 இந்தியர்களின் விவரங்களை பகிர்வதற்கான பணிகளை சுவிட்சர்லாந்து அரசு முன்னெடுத்துள்ளது. ரியல் எஸ்டேட், நகை வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களே இதில் அடங்குவர். இது தொடர்பாக விளக்கமளிக்க அந்த 50 இந்தியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related image

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 100 இந்தியர்களின் பட்டியலை ஏற்கனவே அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close