[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

cm-meets-pm-modi-in-delhi-today

டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். நிதி ஆயோக்கின் 5வது பொது கூட்டம் இதுவாகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மிகக் குறுகிய நேரமே நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சந்தித்து வரும் வறட்சி, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி மத்திய அமைச்சர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close