[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

நெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை

vaiko-condemned-about-train-language-issues

ரயில்வே துறையில் இந்தி மட்டுமே பேச வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு என வைகோ சாடியுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
மத்திய அரசு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் இந்தி பேசாத மாநிலங்களில் தெளித்து விட வேண்டும் என்று நினைக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில். 

82 ஆண்டுகளாக இந்தியை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் நடத்தி நிறுத்தி வைத்த இந்தி மொழியை திணித்தே தீருவோம் என்று மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் இந்தியை திணிக்க மாட்டேன் என்று வாய்மொழியாக கூறியுள்ளார்களே தவிர அந்த திட்டத்தை பல்வேறு வகையில் நடைமுறைப்படுத்த குறியாக உள்ளார்கள். 

தற்போது தென்னக ரயில்வே சுற்றறிக்கையில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்.
 
கோட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகளும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றமானது நிச்சயமாக தமிழில் மாத்திரம் இருக்கக்கூடாது. அதாவது மாநிலத்தில் உள்ள வட்டார மொழியில் தகவல் பரிமாற்றம் கூடாது என கூறியுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் ஏற்கெனவே இந்தி மட்டும் தெரிந்தவர்கள் ரயில்வே துறையில் புகுந்து விட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது.

அவர்களுக்கு வட்டார மொழிகள் தெரியவில்லை. இதனால் இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் சந்திக்கும் நிலை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்டது. இறுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியரால் இந்த கோர விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

ரயில்வே துறையில் வேலைக்கு வரும் பெரும்பாலான இந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி மொழி மட்டும்தான் பேசவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே ரயில்வே துறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள். வட்டார மொழியை பயன்படுத்த கூடாது என்று கூறுவது அந்நிய நாட்டின்னுடைய ஆக்கிரமிப்பை விட கொடுமையானது. இதை எதிர்த்து நிச்சயமாக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும், மதிமுகவும் போராட்ட களத்தில் இறங்கும். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close