[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசின் புதிய முடிவு !

hrd-ministry-proposes-sanskrit-speaking-villages

சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மத்திய மொழி சார் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், “இந்திய மொழிகளை வளர்ப்பதுதான் மத்திய அரசின் முக்கிய குறிக்கோள். இதற்காக மத்திய பல்கலைக்கழக்கத்திலுள்ள மொழி சார்ந்த விரிவுரையாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் அதிகாரிகளை இது குறித்து கவனிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

அத்துடன் இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் மொழியின் வளர்ச்சிக்காக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சமஸ்கிருதம் மொழிக்காக மத்திய அரசின் சார்பில் அமைந்துள்ள கல்லூரிகளின் அருகிலுள்ள கிராமங்களில், கட்டாயமாக இரண்டு கிராமங்கள் சமஸ்கிருதம் மொழி பேசும் கிராமங்களாக உருவாக்கவேண்டும் என்னும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியடையும். மேலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் சார்பில் சமஸ்கிருதம் மொழிக்காக மூன்று மத்திய கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஷ்டிரிய சமஸ்கிரிதம் சன்ஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் என்ற இரு கல்லூரிகள் டெல்லியில் அமைந்துள்ளன. மற்றொரு கல்லூரியான ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் என்ற கல்லூரி ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close