[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்

will-oppose-triple-talaq-bill-in-rajya-sabha-jd-u-leader

முத்தலாக் தடைச் சட்டத்தை மாநிலங்களவையில் எதிர்ப்போம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் உள்ளது. இவர்கள் இவரும் பீகாரில் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தனர். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், நிதிஷ் கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. அவர்கள் கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றது. 

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற 58 அமைச்சர்களில், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பீகாரில் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்பட்டது. இதனை நிதிஷ் குமார் மறுத்துவிட்டார். இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்ப்பதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவரும், பீகாரின் அமைச்சருமான ஷயாம் ரஸாக் கூறும்போது, “ஏற்கனவே இந்தச் சட்ட மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் எதிராக இருக்கிறது. இனியும் அதே நிலையே தொடரும். ராஜ்ய சபாவில் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close