[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

விண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் 

modi-government-approves-new-agency-to-develop-space-warfare-weapon-systems

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விண்வெளி போர் தொடர்பான ஆயுதங்களை தயாரிக்க புதிய அமைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

விண்வெளியில் இந்திய ராணுவத்தினர் போரில் உபயோகப்படுத்த ஆயுதங்களை தயாரிக்க ஒரு புதிய அமைப்பை மத்திய அரசு நிறுவ உள்ளது. இந்த அமைப்பு விண்வெளியில் நவீன தொழில்நுட்பங்கள் உடைய ஆயுதங்களை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் அதிகாரி ஏஎன்ஐ நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். 

அதில், “பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் புதிதாக விண்வெளி போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை தயாரிக்க டிபன்ஸ் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி (DSRA) என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார். 

இந்த அமைப்பில் அறிவியல் விஞ்ஞானிகள் குழு இடம்பெறும். இவர்கள் அனைவரும் முப்படையுடன் இணைந்து அவர்களை விண்வெளி போர்க்கு தயார்படுத்தும் அளவிற்கு செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பு டிபன்ஸ் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி (DSA) அமைப்பிற்கு தேவையான உதவியையும் ஆராய்ச்சியை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஎஸ்ஏ அமைப்பில் இந்தியாவின் முப்படையின் வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்த அமைப்பு பெங்களூருவில் ஏர் வைஸ் மார்ஷல் என்பவரின் கீழ் அமைக்கப்படும். இந்த முடிவு இந்தியா கடந்த மார்ச் மாதம் செய்த ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் சோதனைக்கு பிறகு எடுக்கப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close