[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

உத்திரப்பிரதேச வெயில் கொடுமைக்கு 5 தமிழர்கள் பலி?  

5-tamilans-die-in-uttar-pradesh

உத்திரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கடும் வெப்பத்தால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

வடமாநிலங்களை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று டெல்லியில் மட்டும் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வட மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்ந்து இன்னும் நீடித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. கடந்த மாதத்திலிருந்து இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வடமாநிலங்களில் வெப்பம் வீசுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று ஆக்ராவில் இருந்து கிளம்பிய கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மரணமடைந்துள்ளனர். கடும் வெப்பத்தால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயது மூப்பு காரணமாக வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்து நான்கு பேர் மரணமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக மூத்த வானிலை மைய அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

பச்சையா வயது 80, பாலகிருஷ்ணன் வயது 67, தனலட்சுமி வயது 74, சுப்பாரய்யா வயது 71, கலாதேவி ஆகியோர் இந்த வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close