[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

முரண்டுபிடிக்கும் ராகுல்: காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்?

congress-plan-to-fix-temporary-leader-says-source

காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக தெரிவித்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருவதாகவும், அதனால் அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இடைக்கால தலைவர் நியமனம் குறித்து கடந்த முறை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலேயே பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டால், மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட கொலிஜியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதனுடன் கலந்து பேசி இடைக்காலத் தலைவர் முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக நீடிக்கும் இழுபறி குறித்து ராகுல் காந்தியை மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிகிறது. தலைவர் பதவியில் ராகுல் தொடர்ந்து நீடிக்க வைக்கப்படும் அழுத்தங்களுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என டெல்லியில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

இதற்கிடையே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராக ராகுல் ஒப்புக் கொள்ளவும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த முறை மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் குழுத் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலில் தோல்வியடைந்தார். வருகிற 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close