[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்

supreme-court-deepest-condemned-to-uttar-pradesh-government-for-journalist-arrest

பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது பத்திரிகையாளர் கைதுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் உத்தரப் பிரதேச அரசை நீதிபதிகள் விளாசினர். “எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் ? கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா ? கொலைக்குற்றம் செய்துவிட்டாரா ? அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன ? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா ? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா ?” என்று கேள்விகளை என உத்தரப் பிரதேச அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close