[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

தான் பிறந்தபோது உடனிருந்த செவிலியரை சந்தித்தார் ராகுல் காந்தி!

rahul-gandhi-met-rajamma-who-was-present-at-the-time-of-his-birth

’’ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார். அவர் பிறந்த போது நானும் கையில் ஏந்தினேன்’’ என்று கூறிய, ஓய்வு பெற்ற கேரள செவிலியரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். 

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரி, கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மா. ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மா வவாதில் டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி முடித்து பின்னர் ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு
பெற்றுவிட்டார். அவருக்கு இப்போது 72 வயது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தியின் பிறந்த நாட்டு சர்ச்சை எழுந்தது. அப்போது, ’ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி. டெல்லி ஹோலி கிராஸ் மருத்துவமனையில் கடந்த 1970 ஆண்டு அவர் பிறந்தார். அந்த மருத்துவமனையில் நான் செவிலியராக பணியாற்றினேன். சோனியா காந்திக்கு பிறந்த ஆண் குழந்தையை நானும் கையில் ஏந்தினேன்.  அவர் இப்போது வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், வயநாட்டில் போட்டியிட்டு மக்களவைத் தேர்தலி வெற்றி பெற்றுள்ள ராகுல் காந்தி, அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இன்று அவர் கோழிக்கோடு பகுதியில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜம்மாவை சந்தித்தார். அவரைக் கண்டதும் ராகுல் காந்தி கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிறிது நேரம் செவிலியரிடம் பேசிய ராகுல் காந்தி பின்னர் அங்கிருந்து சென்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close