[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ஃபரிதாபாத் தனியார் பள்ளியில் தீ விபத்து - மூவர் பலி

three-including-two-children-dead-in-fire-at-school

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேர் குழந்தைகள் ஆவர்.

சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார்கள். தீ பற்றி எரியும் போதும் அதிலிருந்து தப்பிக்க, மாடியிலிருந்த குதித்தவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பலரது மனதில் இடியாய் இறங்கியது. இந்தச் சோகம் ஆறுவதற்குள் ஹரியானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹரியானாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள துபா காலணி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் அருகில் இருந்த ஆடைக் கிடங்கில் ஏற்பட்ட தீயானது அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியது. இதில் ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்ட போதிலும், தீயணைப்பு அதிகாரிகள் தாமதாகவே வந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பள்ளியில் தற்போது கோடைக்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லை. அதேசமயம் உயிரிழந்த பெண் அப்பள்ளியில் கல்வி கற்றுக்கொடுப்பவராக இருந்துள்ளார். அத்துடன் தன் இரண்டு குழந்தைகளுடன் பள்ளியிலேயே தங்கியும் இருந்துள்ளார். இந்த நேரத்தில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் தீ விபத்து தொடர்பான சம்பவங்களில் கிட்டத்தட்ட 17,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மக்களை அச்சுறுத்தும் விபத்துக்களில் ஒரு பெரிய விபத்தாகவே தீ விபத்தும் பார்க்கப்படுகிறது. பொதுவாக கட்டடங்கள் கட்டும்போது, தீ தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் தீ விபத்து ஏற்பட்டால் கூட அதிலிருந்து தப்பிப்பதும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close