[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

நின்ற லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு!

andhra-pradesh-5-dead-3-injured-in-road-accident

ஆந்திராவில், நின்ற லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அச்சம்பட்டு அருகில் உள்ள ருத்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் திருப்பதிக்கு சென்றுவிட்டு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற காரை பிரேம் ராஜூ (35) என்பவர் ஓட்டினார். ரேனிகுண்டா புற நகர் பகுதியான துரவராஜூபள்ளே என்ற கிராமத்தின் அருகே கார், இன்று காலை 5 மணியளவில் வந்தபோது, சாலையில் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த விஜய பாரதி (38), பிரசன்னா (14), சென்ன கேசவ ரெட்டி (12), ஓட்டுநர் பிரேம் ராஜூ (35), அங்கய்யா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதையடுத்து ரேனிகுண்டா புறநகர் போலீசார் உடனடியாக வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close