[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

பாஜகவின் வெற்றி ஊர்வலங்களுக்குத் தடை - மம்தா பானர்ஜி

mamata-banerjee-bans-bjp-s-victory-processions-in-bengal

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி ஊர்வலங்களுக்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் இந்த மோதல் அதிகரித்தது. 2014 மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இதனிடையே நேற்று மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் பைக்கில் வந்த நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு காரணம் பாஜகவினர்தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உட்கட்சி பூசலே இதற்கு காரணம் என பாஜகவினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி ஊர்வலத்திற்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாஜகவினர் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் பிரச்னையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “நிர்மல் குண்டுவிற்கு அப்பகுதியில் பாஜக எதிரிகள் அதிகம் உண்டு என்று அவர்கள் குடும்பத்தினர் என்னிடம் கூறினார்கள். காரணம், டெல்லியில் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ச்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதைப் பார்த்து, அவர் தனது வீட்டுக்கு வெளியில் ஒரு பெரிய எல்சிடி திரையை அமைத்தார். இது சாதாரண கொலை அல்ல. சதி மிகுந்து காணப்படுகிறது. இதுகுறித்து சிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு காங்கிரஸ் 16 நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. அப்போது ஒருவர் கூட கொலை செய்யப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் சேர்ந்து 26 இடங்களை பிடித்தது. அப்போதும் ஒருவர் கூட கொலைசெய்யப்படவில்லை. ஆனால் பாஜக பணத்தை வைத்தும் மோசடி செய்தும் 18 இடங்களை பிடித்துள்ளது. இதனால் தற்போது என்ன நடக்கிறது” என கேள்வி எழுப்பினார். 

இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் ராகுல் சின்ஹா கூறுகையில், “மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. தனது கடமையை சரிவர செய்ய மாநில அரசு தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close