[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மும்பையில் கிரிக்கெட் வீரர் குத்திக் கொலை!

mumbai-cricketer-rakesh-panwar-stabbed-to-death

மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை பாண்டூப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பன்வார் (Rakesh Panwar ). கிரிக்கெட் வீரரான இவர், இப்போது சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார். நேற்று இரவு தனது தோழியுடன் பாண்டூப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ராகேஷை கத்தியால் சரமாரிக் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே ராகேஷ் உயிரிழந்தார். 

ராகேஷ் பன்வாரின் நண்பர் கோவிந்த் ரத்தோர் கூறும்போது, ‘’சம்பவம் நடந்த போது ராகேஷூடன் நான் இல்லை. அவர், தோழியுடன் பாண்டூப்புக்கு சென்றிருந்தார். ராகேஷுக்கும் அவர் வசிக்கும் பகுதியில் இருந்த கான் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. அவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார். 

போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close