[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மருந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வீடியோ

bjp-national-vice-president-former-bihar-minister-renu-devi-s-brother-pinu-assaults-a-chemist-at-a-medical-shop-in-bettiah

பீகாரில் பாஜக துணை தலைவரின் சகோதரர், தமக்கு மரியாதை அளிக்காத மருந்து ஆளுநரை சரமாரியாக அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், பாஜக துணை தலைவருமாக இருந்தவர் ரேணுகா தேவி. இவரின் சகோதரர் பினு என்பவர், மருந்து வாங்குவதற்காக பெட்டையா என்ற இடத்தில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்து கடை ஊழியர் எழுந்து நிற்வில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த பினு எழுந்து நிற்காத மருந்து கடை ஊழியரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ரேணுகா தேவி கூறுகையில், “தவறான செயல்பாடுகளை நான் ஆதரிப்பதில்லை. நீண்ட நாட்களாகவே பினு மற்றும் அவரது குடும்பத்தினருடன் நான் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அது நானாக இருந்தாலும் கூட” எனத் தெரிவித்தார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close