[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ராமர் கோயில் கட்ட வேறு என்ன வேண்டும்? சஞ்சய் ராவத் கேள்வி

what-more-is-needed-to-construct-the-ram-temple-sanjay-raut

பாஜக கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ள நிலையில், ராமர் கோயில் கட்ட வேறு என்ன வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத்.

சிவசேனா கட்சியின் தலைவர், உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத் தி வருகிறார். இது தொடர்பாக அவர் பாஜகவை விமர்சித்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் பாஜவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து சிவசேனா, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதை வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக 18 எம்.பி.க்களுடன் உத்தவ் தாக்கரே அயோத்தி செல்ல இருப்பதாகவும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அந்த கட்சி தெரிவித்திருந் தது.

இந்நிலையில் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் கூறும்போது, ‘’அயோத்தியில், இந்த முறை ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன். இப்போதும் கட்டப்படவில்லை என்றால், மக்கள், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். இப்போது பாஜகவுக்கு 303 எம்பிக்கள் இருக்கிறார்கள். சிவசேனாவுக்கு 18 எம்.பிக்கள். பாஜக கூட்டணியில் 350 எம்.பிக்களுக்கு மேல் இருக்கிறார்கள். ராமர் கோயில் கட்ட இதைவிட வேறு என்ன வேண்டும்?’’ என்றார்.

இதையடுத்து ராமர் கோயில் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close