[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் ! ஆய்வில் தகவல்

sports-help-children-fight-emotional-distress

சிறுவயதில் உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இன்றைய கால இளைஞர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்து விடுகின்றனர். சின்ன தோல்விகளை கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. எளிதில் மனதளவில் உடைந்து விடுகின்றனர். தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இளைஞர்கள் புரிய வேண்டும்.

இந்நிலையில் சிறுவயதில் உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
 குழந்தையின் ஆரம்பப் பள்ளி கால வாழ்க்கை தான் குழந்தையின் முன்னேற்றத்தில் அதிகம் பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1997 மற்றும் 1998 காலங்களில் பிறந்து தற்போது 20 வயதில் இருக்கும் பெரியவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 6 முதல் 10 வயதில் நன்றாக உடல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் மன தைரியத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் உடல் விளையாட்டில் ஈடுபடாமல் இருந்த குழந்தைகள் சற்று கூச்சத்தன்மையுடன், அதிக பயம் கொண்டவராகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close