[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

“சஞ்சய் தத்தை மாநில அரசுதான் முன்கூட்டியே விடுவித்தது”- ஆர்டிஐ தகவல்

sanjay-dutt-was-released-by-the-state-government-in-advance

நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.

தற்போது 7 பேரின் விடுதலை குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து குரல்கள் ஒலித்து வருகின்றன.

இதனிடையே மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என பேரறிவாளன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆர்டிஐ, நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close