[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

‘ஜெய்ஹிந்த்’ வாசகத்துடன் பாஜக தலைவர்களுக்கு திரிணாமூல் தொண்டர்கள் கடிதம்

trinamool-congress-cadres-send-letters-to-modi-and-shah-of-jaihind-in-posatal-cards

'ஜெய்ஹிந்த்' வாசகம் எழுதப்பட்ட கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அனுப்பி வருகின்றனர். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாகனத்தை நோக்கி சமீபத்தில் சிலர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். காரில் இருந்து வெளியே வந்து ஆவேசத்துடன் பேசினார் மம்தா. இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சித் தலைவர்கள் வீடுகளுக்கு அருகில் ஜெய் ஸ்ரீராம் எ‌ன்ற கோஷத்துடன் பாரதிய ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கா‌வல் துறையினர் தடியடி‌ நடத்தி‌‌ன‌ர். மேலும் மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாகனத்தில் செல்லும்போது, சாலையில் குறுக்கிடும் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்புவதை வாடிக்கையாக மாற்றி வருகின்றனர்.

இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மம்தா,“பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிடுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு கோஷமிட்டு மேற்கு வங்கத்திற்குள் பிரிவினையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் மதப் பிரச்னை எழுப்ப நினைக்கின்றனர்” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனிடையே மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று எழுத்தப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அட்டைகளை அனுப்பினர். 

Image result for Send letters of Jaihind to Trinamool Congress volunteers.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தா, டம்டம் ஆகிய பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜெய்ஹிந்த் என்று எழுதப்பட்ட தபால் அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அனுப்பிவைத்தனர். இதற்காக கொல்கத்தாவில் உள்ள தபால் நிலையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close