[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

உ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி!

will-contest-by-polls-alone-but-not-permanent-break-from-sp-mayawati

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 5 மாதமாக நீடித்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிக் கூட்டணி முறிந்தது. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, உத்தரப் பிரதேசத்தின் பரம எதிரிக் கட்சிகளான பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. எனினும், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இக்கூட்டணி 15 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜக கூட்டணி 64 இடங்களையும், ரேபரேலி தொகுதியை காங்கிரசும் வென்றன. இதில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருபெரும் கட்சிகள் சேர்ந்தும் இந்தக் கூட்டணிக் கு மொத்தம் 38 சதவிகித வாக்குகளே கிடைத்தன. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கு கிடைக்கவில்லை என்ற அவர், அகிலேஷ் யாதவின் மனைவியைகூட சமாஜ்வாதி கட்சியினரால் வெற்றி பெறச் செய்ய இயலவில்லை என விமர்சித்தார். அரசியல் நிர்பந்தம் காரணமாகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர நேர்ந்ததாகக் கூறிய மாயாவதி, அக்கட்சியின் வாக்கு வங்கியான யாதவர்களின் ஆதரவு பகுஜன் சமாஜுக்கு கிடைக்கவில்லை என்றார்.

’’இது நிரந்தரமான கூட்டணி முறிவு எனக் கூற முடியாது. அரசியல் பணிகளில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் எதிர் காலத்தில் வெற்றி பெற்றதாக நாங்கள் கருதினால், மீண்டும் இணைந்து பணியாற்றுவோம். அகிலேஷ் வெற்றி பெறத் தவறி னால், தனித்துப் போட்டியிடுவதே பகுஜன் சமாஜுக்கு நல்லது. அதனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close