[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

300கிமீ; 7 மாத கால பயணம் - கோவிலின் எல்லையை அடைந்த கோதண்டராமர் சிலை!

seven-months-300-km-giant-statue-reaches-karnataka-temple

7 மாதகால பயணத்துக்கு பிறகு கோதண்டராமர் சிலை தற்போது கோவிலின் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 380 டன் எடைக்கொண்ட ஒரே கல்பாறையில் இருந்து வெட்டி உருவாக்கப்பட்டது கோதண்டராமர் சிலை. கடந்தாண்டு டிசம்பர் 7ம்தேதி முதல் இந்த சிலை கர்நாடகா நோக்கி எடுத்துச்செல்லப்பட்டது. 240 சக்கரங்கள் கொண்ட மிகப்பெரிய கார்கோ லாரியில் கொண்டு செல்லப்பட்டது. 

350 டன் எடை கொண்ட சிலை என்பதால் சாலை மார்க்கமாக கொண்டு செல்வதில் பல பிரச்னைகளை கையாண்டது. சில வீடுகள், கடைகள், மரங்கள் பாதிக்கப்பட்டன. அதிக எடையினால் லாரியின் சக்கரங்கள் வெடித்தன. பல தடைகளை தாண்டி ஜனவரி 31ம்தேதி கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரிக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து  ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் கோதண்டராமர் சிலை வாகனம் நிறுத்தப்பட்டது. 

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சிலையைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த 13 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கோதண்டராமர் சிலையானது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மண் பாதையின் மூலமாக ஆற்றை கடந்து ஓசூர் பேருந்து நிலையம் வழியாக கார்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது.

கிட்டத்தட்ட 300கிமீ, 7 மாதகால பயணத்துக்கு பிறகு  கோதண்டராமர் சிலை தற்போது பெங்களூருவின் எஜிபுரா கோவிலின் எல்லையை அடைந்துள்ளது. இந்த சிலைக்காக மொத்தம் 2.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பயண செலவு மட்டுமே ரூ.1.8 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close