[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி

ys-jagan-mohan-reddy-takes-oath-as-chief-minister-of-andhra-pradesh

ஆந்திர மாநில முதலமைச்சராக, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த நான்கு மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சி, மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 151 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 23 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக இன்று 12.30 மணிக்கு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜயவாடாவில் பதவி ஏற்புக்கு பிரமாண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

திறந்த வெளியில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில், கட்சி நிர்வாகிகளுடன் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று, அவர் மட்டுமே பதவியேற் றார். அமைச்சர்கள், ஜூன் 6 ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராள மான தலைவர்கள் பங்கேற்றனர்.  

முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, இன்று மாலை டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற் கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close