[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ஜெகன்மோகன் பதவியேற்பு விழா: கனமழையால் பந்தல் சேதம்

jaganmohan-reddy-s-swearing-in-ceremony-rain-strong-winds-lashed-the-area

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சேதமடைந்தது. 

நடந்து முடிந்த நான்கு மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைய டுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று 12:30 மணிக்கு நடக்கும் விழாவில், முதலமைச்சராக பதவியேற்கிறார். பின்னர் டெல்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்காக, விஜயவாடாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்சி யினர், மற்றும் பொதுமக்கள் அமர அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கு நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பதவியேற்பு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் சேதமடைந்தது. அதை சரி செய்யும் பணியும் மழையால் ஏற்பட்ட தண்ணீரை வெளியேற்றும் பணியும் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close