[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

உ.பி, ஒடிசாவை அடுத்து ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!

after-up-and-odisha-congress-chief-in-jharkhand-resigns

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் ராஜினாமா செய்துள்ளார். அதே போல ஒடிஷா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து பேசப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், காரிய கமிட்டி அதை ஏற்காததால் ராஜினிமாவை வாபஸ் பெற்றார்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அஜோய் குமாரும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கு காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. 

‘’மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதியில் வென்றுள்ளோம். இரண்டு தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ள்ளோம். கட்சியின் செயல்பாடு மோசமாக இல்லை என்றாலும் தலைவர் பதவியை அஜோய் குமார் ராஜினாமா செய்துள்ளார்’’ என்று ஜார்க் கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அலோக் துபே தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close