[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

“அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சு”- எஸ்.ஐ., எம்.பியாக உருவெடுக்க காரணம் இதுதான்..!

andhra-inspector-turns-mp-saluting-former-boss

ஆந்திராவில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றிய மாதவ், தற்போது தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக மக்களவைக்கு செல்ல உள்ளார். அவர் தனது முன்னாள் உயர் அதிகாரிக்கு  சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சரி இன்ஸ்பெக்டராக பணியாற்றியவருக்கு, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக ஆசை வந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

எம்எல்ஏ, எம்.பி.க்களை பார்த்து சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், இன்று மற்றவர்கள் சல்யூட் அடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். இதுதான் ஆந்திராவின் முன்னாள் இன்ஸ்பெக்டரும் தற்போதைய எம்.பியான கோரண்ட்லா மாதவின் கதை.. கடிரி பகுதியில் சர்கிள் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றிய மாதவ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதனையடுத்து தேர்தலில் போட்டியிட நினைத்த அவருக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியது. அதன்படி ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யை 1,40,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகே தனது பழைய பாஸுக்கு மாதவ் சல்யூட் அடிக்கும் போட்டோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து மாதவ் கூறும்போது, “ என்னுடைய முன்னாள் பாஸுக்கு சல்யூட் அடித்தேன். இது எங்கள் இருவருக்கும் இடையேயே இருக்கும் உணர்வுப் பூர்வமான மரியாதை” என்றார்.

மாதவ் எம்.பியாக தேர்வானது ஒன்றும் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. தேர்தலில் மாதவ் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை முதலில் தேர்தல் ஆணையம் நிராகரிக்கவே செய்தது. அதற்கு தேர்தல் ஆணையம் சொன்ன காரணம், இன்ஸ்பெக்ட்டர் பணியிலிருந்து மாதவ் தன்னை விடுவித்துக் கொண்டது,போலீஸ் தரப்பில் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது தான்.. இதனையடுத்து மாநில நிர்வாக தீர்ப்பாயம் இவ்விவகாரத்தில் தலையிட்டு மாதவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்தே மாதவின் வேட்புமனு ஏற்கப்பட்டு அவர் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

சரி எம்.பி. ஆக வேண்டும் என்று வெறி வந்ததன் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆந்திராவின் ததிபாத்ரி பகுதியில் உள்ள சின்னபோலமாதா பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் அங்கிருந்து ஓடிவிட்டதாக அப்போதைய அனந்தபூர் தொகுதி எம்.பியாக திவாகர் ரெட்டி போலீசார் கடுமையாக சாடியிருந்தார். அத்துடன் போலீசாரை மிகவும் தரம் தாழ்ந்து திவாகர் ரெட்டி விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து கலவர இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்ட்ர் மாதவ், திவாகர் ரெட்டிக்கு சரியான பதலடி கொடுத்தார். அதாவது போலீசாரை எம்.பி.யோ. எம்.எல்.ஏவோ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று எச்சரித்ததோடு போலீசாரை தரக்குறைவாக பேசுவோரின் நாக்கு அறுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து திவாகர் ரெட்டி மாதவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது “ நீ உன்னுடைய போலீஸ் உடையை கழற்றி விட்டு வா.. எதற்கும் தயார்..” என்கிற முறையில் பேசியிருந்தார். 

இதற்கு பின்னரே போலீஸ் துறையை துறந்து அரசியலில் கால் பதிக்க மாதவ் முடிவு செய்தார். அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மக்களும் ஆதரவு தெரிவித்ததால் தற்போது அவர் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close