நாட்டின் நன்மதிப்பை காப்பாற்ற அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
தம்மை மீண்டும் வெற்றி பெற செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரேபரேலி தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், தம்மை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கை ஒர் திறந்த புத்தகம் என்றும், மக்களே தமது குடும்பம் என்றும் கூறியுள்ள சோனியாகாந்தி, மக்களிடம் இருந்து பெறும் வலிமையே, தமது உண்மையான சொத்து என உருக்கமாக கூறியுள்ளார்.
இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாக இருக்கும் என்பதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள சோனியா, மக்களின் பேராதரவை கொண்டு அனைத்து சவால்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்