[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ராகுல் காந்தி ராஜினாமா: காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு

rahul-gandhi-offers-his-resignation-cwc-not-accepted

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார் என்றும் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ்‌ கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் அந்தக் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்றாலும், தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியைச் சந்தித்தார். ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் உயரதிகாரம் கொண்ட, காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை அவர் கொடுத்தார். ஆனால், இதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close