[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

வணிக வளாகத்தில் கோர தீவிபத்து : 15 பேர் பலி

15-students-dead-in-surat-coaching-centre-fire-many-jumped-off-building

குஜராத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவி‌பத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 

குஜராத் மாநி‌லம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியிலிருந்த 1 ஆசிரி‌யர் உள்பட‌ 15 பேர்‌ தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பற்றிக் கொண்டதை அறிந்த மாணவர்கள் வணிக‌ வளா‌‌கத்தில் இரண்டாவது மாடியிலிருந்து தரை‌ நோக்கி குதிக்கும் காணொலி‌ ஒன்று வெளியாகி உள்‌ளது. 

இந்நிலையில், தீவிபத்தில் இறந்த நபர்களுக்கு தலா‌ 4 லட்சம் ரூபாய் இழப்பீடு‌ வழங்கப்படுமென‌, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும் தீவிபத்து குறித்து‌ விரிவா‌‌ன விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்‌. கோர தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இ‌ரங்கல் தெரிவித்ததோடு, குஜராத் ‌மாநிலத்திற்கு உரிய‌ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்‌. தீவிபத்தில் வணிக வளாகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close