[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?” - தமிழிசை பதில்

tamilsiai-said-about-central-minister-job-for-ops-son-raveendrath

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்துள்ளார்.

மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் இரவு வெளியானது. இதில், தேர்தல் நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த ஒரு தொகுதியான தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார்.

இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது. 

இதனிடையே பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அதன் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மே 23-ஆம் தேதி நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி தருவது பற்றி பிரதமர் நரேந்திரமோடி முடிவு எடுப்பார் எனத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே எனவும் அதை சரிசெய்வோம் எனவும் குறிப்பிட்டார். 

இதைத்தொடந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், மத்திய அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை என தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close